கொரோனா ஊசி போட்ட தகவல் மட்டுமல்ல, நமது எந்த மருத்துவத் தகவலையும் யாருக்கும் பகிரவேண்டிய கட்டாயமில்லை.

கொரோனா ஊசி சான்றிதழ் வழங்கவில்லை என்ற காரணத்திற்காக, TNRM தலைவர் ஜெயசீலன் அவர்கள் மகனின் கல்லூரி படிப்பு தடை செய்யப்பட்டதை எதிர்த்து, அவரும், அவரது மகன் ஸ்ரீ ஹரிஹரனும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, சுயமாக வாதாடி, பகுதி அளவு நிவாரணம் பெற்றுள்ளார்கள்.  முக்கியமாக, ஒருவர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட விவரம், அவரது "தனிப்பட்ட ரகசியத் தகவல்", அதை யாருக்கும் பகிர வேண்டியது கட்டாயம் இல்லை என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு நிறுவப்பட்டுள்ளது.

புட்டசாமி வழக்கில், உச்சநீதிமன்ற அரசமைப்பு சாசன அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பின்படி நிறுவப்பட்ட ஐந்து சீராய்வு ( Five-pronged Proportionality Test ) முனைகளை கடைபிடிக்காமல் செய்யப்படும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான கட்டுப்பாடுகளை எவரும் விதிக்கக் கூடாது என்று கோரப்பட்டுள்ள நிவாரணம் உட்பட, சில முக்கிய நிவாரணங்களை இந்த மெட்ராஸ் உயர் நீதிமன்ற தனி நீதிபதி வழங்காததால், விரைவில் மேல்முறையீடு செய்ய உள்ளார்கள்.

வழக்கு ஆவணங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு உங்கள் கவனத்திற்கு இந்த கூகுள் டிரைவில் பகிரப்பட்டுள்ளது.

https://drive.google.com/drive/folders/1VqcNWWvprQJWywF3B7KogL_NCf4iR_OZ