மாண்புமிகு குடியரசர்களின் ஆணைகளை அரசமைப்பு சாசனத்தின்படி செயலாக்க அறிவுறுத்தி காலவறையற்ற உண்ணாவிரதம்
அரசமைப்பு சாசனத்தையும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் மதிக்காமல் செயல்படும் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தையும், நீதிமன்றங்களையும் கண்டித்து, மாண்புமிகு குடியரசர்களின் ஆணைகளை அரசமைப்பு சாசனத்தின்படி செயலாக்க அறிவுறுத்தி காலவறையற்ற உண்ணாவிரதம்.
ஆணைகள்:
1. ஒமலூர் வேலாசாமி செட்டியார் பாடசாலைக்கு சொந்தமான விவசாய நிலத்தை நிலக்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கவும், 100 ஆண்டுகளுக்கு மேல் அதில் குடியிருந்து விவசாயம் செய்து வந்த விவசாயிகளின் குடியிருப்புகளை தமிழ்நாடு சட்டம் 40/1971 படி எந்தவித விள்ளங்கமும் இல்லா சொத்தாகப் பட்டா வழங்கவும், சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு இழப்பீடும், விவசாயிகளைத் தாக்கி குடியிருப்புகளை இடித்த வருவாய்துறை, காவல்துறை, மின் துறை ஊழியர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் நிலக் கொள்ளையர்கள் M.V.செல்லமுத்து குடும்பத்தார் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும்,
2. முதல் பட்டதாரி மாணவரான ஸ்ரீஹரிஹரனின் பொறியியல் கல்லூரிப் படிப்பை, கொரனா ஊசி செலுத்திய சான்றிதழ் வழங்காததால் இரண்டு ஆண்டுகள் தடை செய்த காரணத்திற்காக இழப்பீடு வழங்கவும், அவரது கல்லூரிக் கல்வியை தொடர்ந்து இலவசமாக கோவை அரசு கல்லூரியில் பயில உடனடியாக ஆவன செய்யவும்,
3. அறியலூர் கா.அம்பாபூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவிக்கு கட்டாயப்படுத்தி கொரனா ஊசி செலுத்தியது தொடர்பாக அறியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றமும், அரசு நிர்வாகமும் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளத்தவறியதை கண்டித்தும், உடனடியாக சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் கீதாராணி மற்றும் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, குற்ற வழக்கு பதிய ஆவன செய்யவும்,
மாண்புமிகு இந்தியக் குடியரசர்களாகிய நாங்கள் ஆணையிடுகிறோம்.